Pages

Total Pageviews

Friday, June 3, 2011

14வது தமிழக சட்டசபை முதல் கூட்டம் கவர்னர் உரை:03.06.2011

தமிழக சட்டமன்றத்தில் 14வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று 03.06.2011 காலையில் தொடங்கியது.ஆளுநரின் உரையின் முக்கிய அம்சங்கள்:


1)சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும்.
2)லைஞர் காப்பீட்டுத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, மேம்படுத்தப்படும்
3)தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த மாணவர்களுக்கான இலவச லேப்டாப், வீட்டுப் பெண்களின் உபயோகத்துக்கான இலவச ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவை இந்த வருடம் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் வழங்க ஏற்பாடு
4)கேபிள் டிவி மீண்டும் அரசுடமை ஆக்கப்படும். கேபிள் ஆபரேட்டர்களைப் பாதிக்காத வகையில்.
5)தமிழ்நாடு 20-25 என்ற தொலைநோக்குப் பார்வை திட்டம் தயாரிக்கப்படும். அதன்மூலம் மாநில வளச்சிக்கு திட்டம் வரையப்பட்டு, வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
6)தெருவிளக்குகள் சோதனை அடிப்படையில் சூரிய மின்சக்தியில் இயங்க ஏற்பாடு
7)60 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலித்தீன் பைகளுக்குத் தடை விதிக்கப்படும். இந்திய தர நிர்ணயக் கழகத்தால் விதிக்கப்பட்ட அளவுகளின் அடிப்படையில் மறுசுழற்சி முறை கடுமையாக ஒழுங்குபடுத்தப்படும்
8)மாநில நெடுஞ்சாலைகள் எல்லாம் இரு வழிச்சாலைகளாக மாற்றம் பெறும்
9)மேலவை தேவையில்லை என முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முடிவு எடுத்திருந்ததால் அதன் அடிப்படையில் மீண்டும் மேலவை ஏற்படுத்த மாட்டாது

No comments:

Post a Comment